Monetize Your Account... Plz Click Below the Banner

Friday 26 August 2016

அண்டவெளி குறித்த ஐந்து நூல்கள் தமிழில்...


அண்டவெளி குறித்த ஐந்து நூல்கள் தமிழில்...




                                              


பரந்து விரிந்து இருக்கும் வான் வெளியில் இரவு நேரங்களில் அண்ணாந்து பார்க்கும் நம்மை பார்த்து சிமிட்டும் நட்சத்திரங்கள் நமக்குள் ஆச்சரியத்தை உண்டாக்குகின்றன.அண்டவெளியை பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்து வரும் நிலையில் அதன் முடிவுகளும் வியப்பை ஊட்டுபவை.அதனால் இன்றைய காலகட்டத்தில் அதை பற்றிய அறிவை வளர்த்து கொள்வது இன்றியமையாதது.குறிப்பாக மாணவர் சமுதாயம் சிறுவயதிலே இது குறித்த அறிவை பெருக்கி கொண்டால் எதிர் காலத்தில் சிறந்த விஞ்ஞானிகளாக பிரகாசிக்க முடியும்.
அதனால் உங்களுக்காக உங்கள் அண்டவெளி குறித்த அறிவை பெருக்கிகொள்வதற்கு ஐந்து நூல்களை பதிவிட்டுள்ளேன்.
1.அண்டம்  
2 .ஆரம்ப விண்ணியல்
3.அண்டத்தின் அற்புதங்கள் 1
4 .அண்டத்தின் அற்புதங்கள் 2
5 .அண்டத்தின் அற்புதங்கள் 3

அனைத்து நூல்களும்(ஐந்து நூல்களும் )ஒரே தொகுப்பான டவுன்லோட் லிங்கில் கொடுத்துள்ளேன் .... 









ஒரு வாளி ஆக்சிஜன் அறிவியல் மின்னூல் .


ஒரு வாளி ஆக்சிஜன் அறிவியல் மின்னூல் .






அறிவியல் புனைவுகளுக்குப் பெயர்பெற்ற  அமெரிக்க எழுத்தாளர் Fritz Leiber எழுதிய “A Pail of Air”  என்ற புனைவின் தமிழாக்கமே ‘ஒரு வாளி ஆக்சிஜன்’.  பேரழிவில் இருந்து  தப்பித்த தமது குடும்பம் மட்டுமே , புவியின் கடைசி என நம்பிக்கொண்டிருக்கும் சூழலில் , அக்குடும்பம் , தாம் சந்திக்க நேரிடும் அன்னியர்களிடம் இருந்து தப்பித்ததா !! கதிரவன் இல்லா வாழ்க்கை எப்படி இருக்கும் !!! என்பதை அறிவியலுடன் சேர்த்து அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.









விண்வெளிப் பயணம் - பயனுள்ள மின்னூல்.


விண்வெளிப் பயணம் - பயனுள்ள மின்னூல்.






ஒருவர் சேலத்திலிருந்துச் சென்னைக்குப் பேருந்தில் பயணம் செய்தால் 8 மணி நேரம் ஆகிறது. அவர் சென்னையிலிருந்து புதுடெல்லிக்கு ரயிலில் பயணம் செய்தால் 32 மணி ஆகிறது. இதுவே விமானத்தில் சென்றால் 2 மணி நேரம் ஆகிறது. வேகம் அதிகரிக்கும் போது நேரம் குறைகிறது. இதே நபர் விண்வெளிக்குச் செல்வதாக வைத்துக் கொண்டால் அவர் 5 நிமிடத்தில் விண்வெளிக்குச் சென்று விடுவார். விண்வெளி 200 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. ஆனால் விமானத்தில் செல்ல முடியாது. புவி ஈர்ப்பு விசையை மீறி மணிக்கு 28000 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் தான் விண்வெளியை அடைய முடியும். ஆனால் விண்வெளிப் பயணம் என்பது எளிதான பயணம் அல்ல. அங்கு பயணம் செய்வதற்கு முன்பு ஒருவர் இரண்டு ஆண்டு காலம் கடுமையான பயிற்சி எடுக்க வேண்டும். விண்வெளிப் பயணம் எப்படிப்பட்டது என்பதை இந்த சிறு புத்தகத்தின் மூலம் விளக்கியுள்ளேன். இது மாணவர் சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.










பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் (அறியாத பல தகவல்கள் )


பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் (அறியாத பல தகவல்கள் )





கடல் பயணம் மேற்கொண்டு புறப்பட்ட இடத்திற்கே கப்பல் வந்து சேர்ந்ததன் மூலம் பூமி கோள வடிவமானது என்பது 16ஆம் நூற்றாண்டில் நிரூபிக்கப்பட்டது. பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு என்று கூறினாலும் அங்குச் சென்று வந்தவர்கள் யாரும் இல்லை. பூமியில் உள்ள மிகமிக உயரமான பகுதிக்கோ, மிக ஆழமான பகுதிக்கோ 19ஆம் நூற்றாண்டுவரை யாரும் சென்று வந்ததில்லை என்றாலும்,பூமியின் வடிவத்தையும் கண்களால் பார்த்ததும் கிடையாது.



அறிவியலில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. நவீன தொழில் நுட்பங்களும் வளர்ந்தன. இதன் விளைவாக இன்று மனிதன் காலடி படாத,  இடம் என்று ஏதுமில்லை. பூமியின் வடிவத்தையும் கண்ணால் கண்டுவிட்டான். உலகின் எல்லைகளைத் தொட்டுவிட்டான். இந்தப் பயணம் யாவும் ஆபத்தும், சாகசமும் நிறைந்தவை. பயணத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மரணத்தின் வாசல் வரை சென்று வந்தவர்கள்தான். இத்தகைய பயணத்தில் ஈடுபட்டு முதன்முதலாக வெற்றி பெற்றவர்களைப் பற்றி விரிவான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளது இந்நூல்.










அண்டத்தின் அற்புதங்கள் -(பாகம் -2 )


அண்டத்தின் அற்புதங்கள் -(பாகம் -2 )







அண்டத்தின் அற்புதங்களை தமிழில் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .









அண்டத்தின் அற்புதங்கள் தமிழில் மின்னூல் வடிவில்.

அண்டத்தின் அற்புதங்கள் தமிழில் மின்னூல் வடிவில்.






அண்டத்தின் அற்புதங்களை தமிழில் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .











உலகின் முதல் பெண் விண்வெளி வீரர் -ஏற்காடு இளங்கோ நூல்


உலகின் முதல் பெண் விண்வெளி வீரர் -ஏற்காடு இளங்கோ நூல்


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் என்னுமிடத்தில் மிகவும் புகழ் பெற்ற மகாலட்சுமி கோயில் உள்ளது. இக்கோயில் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டது. சாஹீ மகராஜ் கோலாப்பூவை ஆண்ட போது மகாலட்சுமி கோயில் கருவறைக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.



கோயிலின் கருவறைக்குள் செல்ல ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பெண் தெய்வத்தின் கோயில் கருவறைக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. கருவறைக்குள் சென்று பூஜை செய்ய பெண்களுக்கும் அனுமதி தர வேண்டும் என ஏப்ரல் 2011இல் பெண்கள் கோயிலின் முன்பு போராடினார்கள். இப்படி கோயிலின் உள்ளே நுழைவதற்கான போராட்டங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

கோயிலின் உள்ளே ஒருவர் சென்று வருவது மிகவும் கடினமானது அல்ல. அது வீட்டின் உள்ளே சென்று வருவது போன்ற ஒரு சாதாரண செயல்தான். ஆனால் விண்வெளிக்குச் சென்று வருவது சாதாரண காரியம் அல்ல. அது மிகவும் சிக்கலானது, ஆபத்தானது. ஆனால் விண்வெளிக்கு பெண்கள் சென்று வருவதற்குத் தடை ஏதும் இல்லை. அறிவியல் ஆணையும்,பெண்ணையும் சமமாகவே கருதுகிறது. அறிவியலுக்கு சாதி, மதம், ஆண், பெண் என்கிற பாகுபாடு கிடையாது. இதைத்தான் முதன்முதலில் சோவியத் ரஷியா நிரூபித்துக் காட்டியது.

விண்வெளிக்குச் செல்வது பற்றி கனவு காண்பது என்பது எளிதானது. ஆனால் சென்று வருவது என்பது எளிதானது அல்ல. அது ஒரு சாதனை; சிரமமானது. ஈர்ப்பு விசைச் சிறைக்குள் இருந்து விடுபட்டு, எல்லையற்ற விண்வெளியில் நுழைவது சிரமமானது. விண்வெளிக்குச் செல்வதற்கு என்று கடினமான பயிற்சி தேவை. அதன் பின்னரே அவர் ஒரு விண்வெளி வீரர் என்கிறத் தகுதியைப் பெறுவார்.

விண்வெளிப் பயணம் தொடங்கிய காலத்தில் ஆண்கள் மட்டுமே செல்ல முடியும் எனக் கருதினர். ஏனெனில் ஆண் வலிமையானவர். அவரால்தான் விண்வெளியில் இருக்கும் ஆபத்தைச் சமாளிக்க முடியும் எனக் கருதினர். விண்வெளிப் பயணத்தில் முதல் வெற்றி பெற்ற சோவியத் ரஷியா அப்படி கருதவில்லை. ஆண், பெண் சமத்துவத்தை அது போற்றியது. பெண்களும் விண்வெளிக்குச் செல்ல முடியும் என ரஷிய விஞ்ஞானிகளும், அரசும் கருதின. ஒரு சோசலிச குடியரசு அப்படி நினைப்பது என்பது ஆச்சரியம் அல்ல. அது பழமைவாதிகளுக்கு வேண்டுமானால் விரோதமாக இருக்கலாம்.

சோவியத் ரஷியாவின் பெண் சமத்துவம் ஒரு பெண்ணையும் விண்வெளிக்கும் அனுப்பியது. உலகில் முதன் முதலில் பெண்ணை விண்வெளிக்கு அனுப்பிய நாடும் சோவியத் ரஷியாதான். முதன் முதலில் விண்வெளிக்குச் சென்று வந்த பெண் வாலண்டினா தெரஸ்கோவா ஆவார்.